Diretcor Atlee: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸானது. ஜவான் திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் சாதனை படைத்தது.
இந்திய சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும் வகையில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை செய்தது. இந்த படத்தை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில், ஹிந்தி திரைப்படத் துறைக்கான இந்திய விருது வழங்கும் ஜீ சினி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறந்த கதை மற்றும் சிறந்த இயக்குநர் என்ற விருது ‘ஜவான்’ படத்திற்காக அட்லீக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விருது பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் அட்லீ தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஜவான்’ படத்திற்காக சிறந்த கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கிய ‘ஜீ சினி’-க்கு நன்றி.
முதலாவதாக நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி சாருக்கான் சாருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்து, யாருடைய அசைக்க முடியாத ஆதரவு கொடுத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் எனது நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.