திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்?.. பேச்சுவார்த்தை முடிவுகள் என்ன?..

0
68

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தங்களது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்து என்பது குறித்து திமுக தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் சென்னை, கோவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here