‘DNS’: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘DNS’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் சுமார் 10 நாட்கள் படமாக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ‘DNS’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதன்படி, படத்திற்கு ‘குபேரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.