‘DNS’ அப்டேட்.. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு கோவா செல்லும் படக்குழு..!

0
75

‘DNS’: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘DNS’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் சுமார் 10 நாட்கள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here