‘குஷ்பூவுக்கு குழந்தையே பிறக்காதுனு சொல்லிட்டாங்க’ – மனமுறுகிய சுந்தர் சி

0
152

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் சுந்தர் சி. தொடர்ந்து பல கருத்துள்ள படங்களை இயக்கிய சுந்தர் சி, ஒரு கட்டத்தில் காமெடி படங்களை இயக்கத் தொடங்கினார்.  தற்போது திரில்லர் கலந்த காமெடி படமான அரண்மனை எடுத்து வருகிறார். 

இவர், திரைப்படங்களை இயக்கும்போதே நடிகை குஷ்பூவை  5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் பிறந்தனர்.

இந்த நிலையில் தற்போது தனது குடும்ப விஷயத்தை வெளிப்படையாக சுந்தர் சி ஒரு மேடையில் பேசியுள்ளார். அப்போது, சுந்தர் சி-க்கு குஷ்பூ-வுக்கு திருமணம் நடந்து பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. 

இது குறித்து மருத்துவமனையில் கேட்டபோது குஷ்பூவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனராம். இதனால் மனமுடைந்த குஷ்பூ, சுந்தர் சி-யிடம் வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவிட்டாராம்.

அந்த அளவிற்கு குஷ்பூ மனவுளைச்சளில் இருந்ததாகவும், அவரை சுந்தர் சி ஆறுதல் படுத்தியிருக்கிறார். அதன் பின்னர் தான் தங்களது, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாக சுந்தர் சி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here