செம்ம ஹாப்பியில் விஷால்.. ‘ரத்னம்’ படப்பிடிப்புகள் நிறைவு..! மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

0
121

Actor Vishal: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34 ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதாக நடிகர் விஷால் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருது: இந்திய இயக்குநரின் ஆவணப்படம் பரிந்துரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here