‘Thiru.Manikam’: ஹிந்திப் படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்த படம் ‘திரு.மாணிக்கம்’. இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக அனன்யா நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் இணைந்து தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ‘சீதா ராமம்’ படத்திற்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைனா சுகுமார் ஒளிப்பதி செய்கிறார். இந்த படத்தை ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘திரு.மாணிக்கம்’ படத்திற்கான படப்பிடிப்பு குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளது. படப்பிடிப்பைத் தொடர்ந்து படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது சொந்த குரலில் தங்களது வட்டார மொழியில் பேசியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ‘திரு.மாணிக்கம்’ படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் படக்குழு தெரிவித்துள்ளது.