துல்கர் சல்மான் திரையுலகில் நுழைந்து 12 ஆண்டுகளை நிறைவு..! புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு..!

0
76

Dulquer Salmaan: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘துல்கர் சல்மான்’ நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவுடன் இணைந்து சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி இப்படத்தை தயாரிக்கிறார்.

ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

துல்கர் சல்மான் திரையுலகில் நுழைந்து 12 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் 80களில் இருந்த மும்பையை பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. நிச்சயமாக, ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழுவினர் உறுதியளிக்கிறார்கள்.

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here