துல்கர் சல்மானை வைத்து இயக்கும் ஜேசன் சஞ்சய்..!

0
196

Jason Sanjay: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கவுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த வகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி மற்றும் கவின் ஆகியோருடன் பேசியதாக கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களால் இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தற்போது இந்த படத்தின் நடிக்க துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமடைந்த துல்கர் சல்மான் ஹிந்தி படங்களில் நடித்தும் பான் இந்திய அளவில் பெயர் எடுத்திருக்கிறார். பல்வேறு படங்களில் அவர் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவிலை என்பதே நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here