‘தக் லைஃப்’-ல் மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்.. அப்போ சிம்பு?..

0
90

Dulquer Salmaan: இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த ‘தக்லைப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகுவதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகிய தகவல் வெளியானது. மேலும், துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மீண்டும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகர் சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய காதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here