‘Dunki’: ஷாருக்கான் நடித்து நகைச்சுவை படமாக வெளிவந்த ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுவந்த நிலையில் உலக அளவில் ரூ.305 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ படம் கடந்த 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
படத்தில் நடிகை டாப்சி, நடிகர்கள் விக்கி கவுசல், போமன் ஈரானி, விக்ரம் கோச்சர், அனில் கிரோவர் உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கின்றனர். நகைச்சுவை படமாக வெளியாகிய இந்த ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருந்தபோதிலும், இந்த ‘டன்கி’ திரைப்படம் உலக அளவில் ரூ.305 கோடியை வசூல் செய்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: Rajini paid tribute to Vijayakanth: ‘விஜயகாந்த் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி’