வெற்றி துரைசாமி இறப்புக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

0
118

சென்னையின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘என்றாவது ஒரு நாள்’. இயக்குநர் வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போனதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

அவர் கஷாங் நாலா NH 05 இல் சுற்றுலா இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. வெற்றி துரைசாமியுடன் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டென்சின் என்ற கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்பதால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், எட்டு தினங்களுக்கு பிறகு தற்போது வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு பணியினர் சடலமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து, மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழப்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here