‘தமிழில் எனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசான்’ – ‘கேப்டன் மில்லர்’ வில்லன் எட்வர்ட் சோனென்ப்ளிக்!

0
66

Edward Sonnenblick: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக். ஒவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் என கூறியுள்ளார்.

அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக், பாலிவுட் படங்களில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறார். பலவிதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். முக்கியமாக வில்லன் கதாபாத்திரங்களி அவர் நடித்திருக்கிறார்.

ஹன்சல் மேத்தா, கங்கனா ரனாவத், விக்ரமாதித்யா மோத்வானே, ராஜமௌலியின் ‘RRR’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும், தற்போது பொங்கலுக்கு வெளிவரவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

அவர் ‘தி கபில் சர்மா ஷோ’வின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், ‘இண்டிபீடியா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

இவர், சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில், “தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். அவருடைய ‘மூன்றாம் பிறை’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமா என்னோட மனைவிக்கு கமல்ஹாசனை ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு உலக மகா நடிகர், ஒரு நாள் அவரை நேரில் பார்க்க வேண்டும். அவர் கூட நடிக்க வேண்டும், அதுதான் என்னோட ஆசை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘HBD A.R.Rahman’: இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here