வெளியானது ‘மங்கை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

0
218

‘Mangai’ : தமிழ் சினிமாவில் ‘கயல்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஆனந்தி. இவர், 2021ஆம் ஆண்டு மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது ஆனந்தி இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘மங்கை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ‘மங்கை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘Eelamma yelo’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here