அரசியலில் இறங்கிய விஜயகுமார்.. வெளியானது எலெக்‌ஷன் பாடல்..

0
111

VijayKumar: தமிழ் சினிமாவில் உறியடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகுமார். இந்த படம் சரிவர ரசிகர்களிடம் சென்றடையாத நிலையில் சில நாட்களுக்குப் பிறகே இந்த படத்திற்கான மவுஸ் எகிறியது.

அதன்பேரில் உறியடி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பில் உறியடி பாகம் இரண்டு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இனி படம் இயக்கபோவதில்லை எனவும் படங்கள் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விஜயகுமார் நடிப்பில் ‘பைட் கிளப்’ படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘எலெக்‌ஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், இன்று படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘எலெக்‌ஷன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்ந்து, இந்த பாடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பிற்கு ஏற்றார்போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக உருவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here