‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் ‘GOAT’-அ?’ – கதறும் வெங்கட் பிரபு..!

0
94

Venkat Prabhu: தமிழ் சினிமாவில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீரஜ். இவர் தற்போது மீரா மஹதி இயக்கத்தில் உருவாகும் ‘டபுள் டக்கர்’ படத்தில் நடிக்கிறார். தீரஜுக்கு ஜோடியாக ஸ்முரிதி வெங்கட் நடிக்கிறார்.

இந்த படத்தை ஏர் ஃபிளிக் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்களுடன், சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ஃபேண்டசி திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்திற்காகவே இரண்டு புதுமையான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி ‘டபுள் டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். யூடியூப்பில் வெளியான டீசர் தற்போது வரை 3M பார்வையாளர்களை கடந்துள்ளது.

தொடர்ந்து, அனிமேஷன் கதாபாத்திரங்கள் இருப்பதால் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் இந்த புதிய அனிமேஷன் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘டபுள் டக்கர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ் எண்டெர்டைன்மெண்ட்டில் வெளியான இந்த டிரைலர் குழந்தைகளிடமும் ரீச்சாகியுள்ளது.

இந்த ‘டபுள் டக்கர்’ படம் இன்று (ஏப்ரல் 5) ரிலீஸாகி ரசிகர்களிடம் பாசிடிவ் ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று (ஏப்ரல் 4) தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘டபுள் டக்கர்’ படத்தின் போஸ்டரையும் வெளியிட்டு, “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் ‘கோட்’-அ” என கூறியுள்ளார். படத்தின் போஸ்டரில் ஆடு உள்ளது. அதன் மேல் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் இருக்கிறது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here