‘Ethirneechal’: தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ‘எதிர்நீச்சல்’. இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் பல நடிகர்கள் நடித்துவருகின்றனர். இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இதுவரை சீரியல் பார்க்காதவர்களை பார்க்க வைத்த ஒரே சீரியல் ‘எதிர்நீச்சல்’ தான். இந்த சீரியலை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநருக்கு வாழ்த்து கூறியதாக செய்தி வெளியானது.
கடந்த 2022ஆம் ஆண்டு எதிர்நீச்சல் சீரியல் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை டிஆர்பி ரேட்டிங்கிலும் உயர்ந்து இருக்கிறது. இந்த சீரியலில் மக்களால் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் ஆதி குணசேகரன் தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தது. பின்னர், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி இன்றோடு இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக சீரியல் குழுவினர் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து நடிகை கனிகா பதிவிட்ட பதிவில், “எதிர்நீச்சல் சீரியல் இரண்டு வருடங்களை நிறைவு செய்து இருக்கிறது. ஒரு மைல்கல்லை கொண்டாடி இருக்கிறது. எங்களது இயக்குநர் திருச்செல்வத்திற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை கூற வேண்டும்.
அறிவு, கனவு, ஆசை, எக்கச்சக்கமான திறமையை கொண்ட மனிதர் தான் அவர். எதிர்நீச்சல் சீரியலில் எக்கசக்கமான அழகான கதாபாத்திரங்களை இவர் உருவாக்கியிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் vs வேல்முருகன்.. TVK பெயரால் வந்த சிக்கல்..!