ரஜினியுடன் நடிக்க மறுத்த பகத்.. இதுதான் காரணம்.. சமாதானம் செய்த இயக்குநர்..

0
82

Vettaiyan: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் நடித்தி வருகிறார். இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வேட்டையன் படத்தில் நடிக்கும் பகத் பாசில் குறித்த சுவாரசியாமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வேட்டையன் படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் பகத்தை அனுகியுள்ளார். ஆனால், பகத் படத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியுள்ளார்.

ஏனென்றால் தொடர்ந்து பகத் பாசில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இந்த படத்திலும் ரஜினிக்கும் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க கூப்பிடுவதாக நினைத்திருக்கிறார்.

ஆனால், பகத் கதையை கேட்டவுடன் கட்டாயம் படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். இந்த வேட்டையன் படத்தில் இதுவரை பகத்தை பார்த்திராத வகையில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here