சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த பிப்.19ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இணையத்தில் தமிழக வெற்றிக் கழத்தில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், தற்போது கட்சி சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையானது முழுக்க முழுக்க கட்சி சார்பில் அறிமுக செய்யப்படவுள்ள செயலி மூலம் மட்டுமே நடைபெறும்.
தற்போது உறுப்பினர் சேர்க்கை படிவம் என கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது உண்மை இல்லை அது பொய்யான படிவம்’ என கூறப்பட்டுள்ளது.