‘Family Star’: யூடியூப் டிரெண்டிங்கில் ‘நந்த நந்தனா’ பாடல்…

0
102

‘Family Star First Song’: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் பாடலான ‘நந்த நந்தனா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சித் ஶ்ரீராம் பாடியுள்ள ‘நந்த நந்தனா’ என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இந்த ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here