‘Family Star’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
70

‘Family Star First Song’: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சித் ஶ்ரீராம் பாடியுள்ள ‘நந்த நந்தனா’ என்ற பாடல் நாளை (பிப்.7) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வீடியோ கிளிம்ப்ஸ் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்பிஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here