‘Family Star’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
108

‘Family Star’: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

அதன்படி, ‘ஃபேமிலி ஸ்டார்’ ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதில், ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்துகொண்டு, தோளில் சாக்குப்பையுடனும், வாயில் ஆதார் அட்டையுடனும் ஓடுவது போல அமைந்திருக்கிறது. ஒரு சாதாரண நடுத்தரக் கணவரின் வாழ்க்கையை கச்சிதமாக இந்த போஸ்டர் படம்பிடித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here