‘The G.O.A.T.’ படத்தில் நடிக்கவிருக்கும் பிரபல இயக்குநர்.. கதறும் ரசிகர்கள்..!

0
133

Venkat Prabhu: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்தது.

தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து வெங்கட் பிரபுவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here