உங்க பாசத்துக்கு ஒரு அளவு இல்லையா.. வீட்டை சேதப்படுத்திய ரசிகர்கள்.. அப்செட்டான அல்லு அர்ஜூன்..

0
99

Allu Arjun Fans: இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மூலம் உலகளவின் ரீச் ஆனார். தற்போது ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது.

அல்லு அல்ர்ஜூன் இன்று தனது 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு இன்று டீசர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதிகாலையில் குவிந்த ரசிகர்களை அல்லு அர்ஜுன் நேரில் சென்று சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் வீட்டில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். பட்டப்பகலில் வெயிலில் ரசிகர்கள் காத்திருப்பதைக் கண்ட அல்லு அர்ஜூன் வெளியே வந்து தனது ரசிகர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது, அல்லு அர்ஜூனை பார்த்த உற்சாகத்தில் வீட்டின் சுவர் மீது ஏறி அங்கிருந்த கம்பிகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், ஒரு ரசிகர்கள் சுவரில் இருந்து கீழே விழப்போனார். இதனையெல்லாம் பார்த்த அல்லு அர்ஜூன் அப்செட்டாகி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here