ஓட்டுப்போட கூட வர மாட்டீங்களா?.. நடிகைகளை கழுவி ஊற்றிய ரசிகர்கள்..

0
160

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், இரண்டாம் தேர்தல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) கர்நாடகாவில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துச் சென்றனர். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.

இதில், ஒரு சில முக்கிய நடிகர்கள் தங்களது வாக்கினை செலுத்தவில்லை. அதில், நடிகை ரம்யா மண்டியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் பிரலமடைந்தவர் ரம்யா. இவர், 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல், 2023ஆம்  நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்களிக்கவில்லை.

தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்லிலும் வாக்கு செலுத்தவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரம்யா இதற்கு முன்பு மண்டியா தொகுதி எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமான நடிகை ராஷ்மிகாவும் ஓட்டுப்போடவில்லை என்ற தகவலும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது ஜனநாயகக் கடமை ஆற்ற தவறிய ராஷ்மிகாவை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். தேர்தலில் ஓட்டுப்போடுவதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு?.. தேர்தலில் ஓட்டளிக்காமல் எங்கே போனீர்கள்?.  உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here