‘என்ன ரங்கா நியாயமா இது?’ – லோகேஷ் மீது கடுப்பான ரசிகர்கள்..!

0
147

Lokesh Kanagaraj: தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கான ஷூட்டிங் வருகிற மார்ச் அல்லது ஏப்ரம் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில் வெளியாகவுள்ள ‘இனிமேல்’ ஆல்பத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் வரும் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையே நேற்று (மார்ச்.21) ஆல்பத்தின் டீசர் மட்டும் வெளியானது. இந்த டீசரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசனின் ரொமான்ஸ்கள் அதிகமாக இருந்தன.

இந்த டீசர் வெளியானதில் இருந்து லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதாவது, இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் காதலன் கதாபாத்திரம் அல்லது காதலி கதாபாத்திரம் கொடூரமான முறையில் இறந்துபோவதாக காட்டியிருப்பார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், லோகேஷ் கனகராஜிற்கு காதலே பிடிக்காது போல என கமெண்ட் செய்து வந்தனர். ஒரு நேர்காணலில் கூட, தனக்கு ரொமான்ஸ், காதல் விஷயங்கள் எல்லாம் வராது என லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பார்.

ஆனால், தற்போது அவரது நடிப்பில் வெளியான இந்த டீசரில், ஒரு ஹீரோ கூட இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க யோசிப்பார்கள், ஆனால், லோகேஷ் அதனையும் மீறி ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸில் பட்டைய கிளப்பி இருக்கிறார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும், அவரது படங்களில் நடிக்கும் காதல் கதாபாத்திரங்கள் மட்டும் இறப்பது போன்ற காட்சிகளை அமைத்துவிட்டு, இப்போது லோகேஷ் மட்டும் ரொமான்ஸ் செய்து வருகிறார், ‘இதெல்லாம் நியாயமா லோகேஷ்?’ என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here