ஓடிடியில் ரிலீஸ் ஆனது ‘பைட் கிளப்’ படம்..!

0
113

‘Fight Club’: அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கத்தில் நடிகர் விஜய்குமார் நடித்த திரைப்படம் ‘பைட் கிளப்’. இப்படத்தில் கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ‘பைட் கிளப்’ படத்தை ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘பைட் கிளப்’ படம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக படக்குழு வெளியாகியுள்ளது. ரூ.3 கோடியில் உருவான இப்படம் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கவுள்ள ‘சர்தார் 2’ படம்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here