Sher Khul Gaye: ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஃபைட்டர்’ திரைப்படத்தின் பாடல் வெளியான நிலையில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ள படம் ‘ஃபைட்டர்’. இந்த படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு ஷாம் ஷெர் பதனியா என்கிற பேட்டி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஹிரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே ‘ஃபைட்டர் படத்தின்’ டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்த டீசர் படத்திற்கான ஹைப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ‘ஷேர் குல் கயே’ பாடல் நேற்று (டிச 15) வெளியானது. இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரலாகி வருகிறது.
மேலும், இப்பாடல் யூடியூப்பில் வெளியாகி ஒரு நாள் ஆன நிலையில் தற்போதுவரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து இப்பாடல் ட்ரெண்டிங்கில் 6ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ‘ஃபைட்டர்’ படம் வெளியாகவுள்ளது.