தமிழ் சினிமாவில் ‘காதல் கோட்டை’, ‘வெற்றிக்கொடிகட்டு’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சிவசக்தி. இவர், சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக ஒரு பிரபலமான நிறுவனத்திடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.
அந்தப் பணத்தை திருப்பிக்கொடுப்பதற்கான காசோலைகளை அந்த பிரபல நிறுவனத்திடம் சிவசக்தி பாண்டியன் கொடுத்துள்ளார். ஆனால், அந்த காசோலைகளில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவனம் சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில், சிவசக்தி பாண்டியன் மோசடி செய்தது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, சிவசக்தி பாண்டியனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் சிவசக்தி பாண்டியனை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.