வெளியானது நரேன் நடிக்கும் ‘ஆத்மா’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!

0
110

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிகர் நரேன் தற்போது முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘ஆத்மா’. இந்த படத்தில் நரேனுக்கு ஜோடியாக ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் நடித்த ஷ்ரத்தா சிவதாஸ் நடிக்கிறார்.

அவர்களோடு நடிகர்கள் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னணி உள்ள மர்மத்தை தேட ஆரம்பிக்க, தொடர்ச்சியாக பல மர்ம முடிச்சுக்கள் அவிழ ஆரம்பிக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு ஹாரர் கலந்த மிஸ்டரி திரில்லர் கதையில் ‘ஆத்மா’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் துபாயில் நடைபெற்றது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here