#VaaraiRathnam: நடிகர் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் நாளை காலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். விஷாலின் 34 ஆவது படத்திற்கு ‘ரத்னம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில் ‘ரத்னம்’ படத்தின் முதல் லிரிக்கல் பாடல் புத்தாண்டு தினமான நாளை (ஜனவரி01, 2024) காலை வெளியாகவுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ‘ஊமை விழிகள் பார்ட் 2’ – AI மூலம் உயிர் பெறும் விஜயகாந்த்..! ரசிகர்கள் உற்சாகம்..!