இன்று விஷாலுக்கு நாளை விஜய்க்கு?.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.. 

0
128

‘Rathnam’ : ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியாகி சக்கப்போடு போட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 26) ரத்னம் படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதற்கிடையே, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து விஷால் படத்தை திரையிட விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விஷாலும் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  “நடிகர் விஷால் அவர்களின் ‘ரத்னம்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப் பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்?

அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா? இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது!

இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான்! தமிழ் சினிமாவிற்கும் இது தான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here