‘இன்ஸ்டாகிராமில் நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி’

0
97

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். இவர், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழ் சினிமாவில் அஜித்குமாருக்கு ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது வித்யாபாலன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாலிவுட் நடிகை வித்யாபாலன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “எனது பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் போலி கணக்கைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே அந்த கணக்கில் இருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் யாரும் கண்டுகொள்ள வேண்டாம். சிலர் எனது பெயரில் போலி கணக்கு வைத்து, மற்றவர்களை ஏமாற்றி பணம் மற்றும் மற்ற உதவிகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் இதைப்போலவே வித்யாபாலன் பெயரில் வாட்ஸப்’ மூலம் மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன்?.. ஹாலிவுட் வாய்ப்பு பறிபோனதா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here