வெளியானது ‘Freedom’ செகண்ட் லுக் போஸ்டர்..!

0
187

‘Freedom Second Look’: தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ‘பிரீடம் ஆகஸ்ட் 14’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பாலிவுட் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மேலும், உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘பிரீடம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

90 கால கட்டத்தை வெளிப்படுத்தும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் கேரளாவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், கூடிய விரைவில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here