நாளை வெளியாகும் ‘ஜோஷ்வா’ டிரைலர்..! ப்ரோமோ வீடியோ வெளியிட்ட படக்குழு..!

0
163

‘Joshua’: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இந்த படத்தில் பிக்பாஸ் வருண் கதாநாயகான நடித்திருக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

2019ஆம் ஆண்டில் ‘ஜோஸ்வா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது. தற்போது படம் ரிலீஸுக்குத் தயராக உள்ளது.

இந்த நிலையில், ‘ஜோஸ்வா’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், படத்தின் கதாநாயகனும், ஜெயம் ரவியும் இணைந்து பேசுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபன்னான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஜோஸ்வா’ திரைப்படம் வருகிற மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here