G.O.A.T டைட்டிலை மாற்ற படக்குழு திட்டம்..! டைட்டில் லீக் ஆனது தான் இதற்கு காரணமா?..

0
97

Thalapathi 68′: ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் G.O.A.T (Greatest of all Time) என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தின் டைட்டில் லீக் ஆன நிலையில் அதனை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு கூறியிருந்தது. இதனிடையே, ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘Boss’ அல்லது ‘Puzzle’ என சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனை நம்ப வேண்டாம் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ‘X’ வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு படத்தின் டைட்டில் G.O.A.T (Greatest of all Time) என்ற தகவல் வெளியாகியது. இதனைக் கண்ட படக்குழு அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையாகவே தளபதி 68-ன் படத்தின் டைட்டில் G.O.A.T என வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த டைட்டில் லீக் ஆனதால் வேறு பெயர் வைக்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், டைட்டிலை மாற்ற வேண்டாம், G.O.A.T (Greatest of all Time) என்றே இருக்கட்டும் என படக்குழு இறுதியாக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்து படக்குழு டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள தலைப்பு உண்மையானதா என தெரியவில்லை. இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்! அப்போ வாடிவாசல் சூட்டிங் என்னாச்சு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here