சங்கரால் அப்செட்டான தில் ராஜு.. ராம் சரணால் அடித்த ஜாக்பாட்..

0
101

‘GameChanger’: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் அந்த வகையி இந்த படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்க 300 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு கொடுத்திருக்கிறார் சங்கர். தயாரிப்பாளர் தில் ராஜும் எடுத்துக் கொடுத்துவிட்டார்.

ஆனால், நாளடைவில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டை தாண்டி பல கோடி எகிறியுள்ளதாக கூறப்படுகிறது. கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

‘கேம் சேஞ்சர்’ படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகியிருந்தால் தில் ராஜுவுக்கு நல்ல ப்ராஃபிட் கிடைத்திருக்கும். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில், எத்தனை கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம் என்பதையே தில் ராஜு மறந்திருப்பார்போல, இதனால் அவர் சங்கர் மீது பயங்கர அப்செட்டில் இருக்கிறார். இந்த நிலையில் தான் தில் ராஜுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

ராம் சரண் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த ‘கேம் சேஞ்சர்’ படத்தில் டிஜிட்டல் சாட்டிலைட்உரிமத்தை ஜி டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுவும், ரூ.275 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதலில் 10% அட்வான்ஸும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது சாந்தமாகி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மிகப்பெரிய கலெக்‌ஷன் கிடைக்கும் என எதிர்பார்த்து தில் ராஜு காத்திருக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸாகவுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here