‘Game Changer’: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் ‘ஓஜி’ படமும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘கேம் சேஞ்சர்’ படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதனால், ராம் சரண் ரசிகர்கள் ஷங்கர் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘கேம் சேஞ்சர்’ படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 27ஆம் தேதி ராம் சரணின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினமே படம் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.