சூரி நடிக்கும் ‘கருடன்’.. டப்பிங் பணிகள் தொடக்கம்..!

0
86

Garudan Movie: நடிகர் சூரி விடுதலை, கொட்டுகாளி ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கருடன்’. இந்தப் படமானது வெற்றிமாறன் கதையில், துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படம் கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்னர், ‘கருடன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமுத்திரக்கனி தனது சமூல வலைத்தளத்தில் பதிவிட்டார்.

சமீபத்தில் ‘கருடன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு குத்தனர்.

அந்த வகையில் தற்போது படக்குழு ‘கருடன்’ படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான டப்பிங் பணியில் தொடங்கியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதை என்பதால் இந்த படத்திற்கு இன்னும் ஹைப் அதிகமாகியுள்ளது. மேலும், ‘கருடன்’ வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ‘நான் பூர்ணாவுக்கு குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன்’ – மிஷ்கின் பேச்சு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here