‘கில்லி’ ரீரிலீஸ் தேதி அறிவிப்பு.. வைரலாகும் போஸ்டர்..

0
77

Ghilli: தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவரது ஆரம்பக்கட்ட படங்கள் சரிவர ரீச் ஆகாமல் இருந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டும் விஜய்யை தூக்கிவிட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.

இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.

‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கில்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரீரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த போஸ்டர் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக ‘கில்லி’ ரீ ரிலிஸ் படம் ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், கில்லி படம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here