ரீ ரிலீஸிலும் சாதனை படைத்த ‘கில்லி’.. வெறித்தனம் காட்டிய ரசிகர்கள்..!

0
132

Ghilli: தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவரது ஆரம்பக்கட்ட படங்கள் சரிவர ரீச் ஆகாமல் இருந்த நிலையில் ஒரு சில படங்கள் மட்டும் விஜய்யை தூக்கிவிட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.

இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது.

‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ‘கில்லி’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கில்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரீரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது கில்லி படம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, இதுவரை ரீ ரிலீஸான படங்களில் கில்லி படத்திற்கு தான் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

கில்லி படத்தை பல முறை நாம் கே டிவி-ல் பார்த்திருந்தாலும், தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைக்கவில்லை அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ரிலீஸை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here