Meetha Raghunath: இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘குட் நைட்’. மணிகண்டனின் நகைச்சுவையான நடிப்பு மற்றும் மீதா ரகுநாத்தின் எதார்த்தமான நடிப்பும் ரசிக்ரகளை கவர்ந்தது.
தொடர்ந்து, இந்த படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மீதா ரகுநாத். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில், மீதா ரகுநாத்திற்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.