கவுண்டமணியின் இந்த செயலால் ஆடிப்போன படக்குழு..!

0
118

Goundamani: ஷாஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் படம் ‛ஒத்த ஓட்டு முத்தையா’. இந்த படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து யோகி பாபு, ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த மூன்று நடிகர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகளும் நடிக்கின்றனர்.

‛ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படம் ஒரு ஓட்டை மையமாக வைத்து காமெடி கதைக்களமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சென்னை பரணி டப்பிங் ஸ்டூடியோவில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டப்பிங் பணியில் கவுண்டமணி பங்கேற்றார்.

சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து கவுண்டமணி உற்சாகத்துடன் டப்பிங் செய்துள்ளார். இதனைப் பார்த்த படக்குழுவினர் வியந்துபோய்விட்டனர். மேலும், இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here