‘Guardian’: இயக்குநர் சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா பேயாக நடித்துள்ள படம் ‘கார்டியன்’. இந்த படத்தில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸானது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது ‘கார்டியன்’ படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘கார்டியன்’ படத்திற்கு தனிக்கைக்குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.
ஹன்சிகாவின் இந்த மாறுபட்ட நடிப்பால் உருவாகியுள்ள ‘கார்டியன்’ படம் வருகிற மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள ‘கார்டியன்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.