Guardian: இயக்குநர் சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா பேயாக நடித்துள்ள படம் ‘கார்டியன்’. இந்த படத்தில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸானது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து வெளியான டிரைலருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த ‘கார்டியன்’ படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி ரிலீஸானது.
திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் வெளியான இந்த ‘கார்டியன்’ ஸ்நீக் பீக் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரில்லர் கதைக்களத்துடன் பதறவைக்கும் காட்சிகளுடன் வெளியாகவுள்ளது.