Guntur Kaaram: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. இந்த திரைப்படம் தெலுங்கு சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. ஆந்திராவில் தமிழ் படங்களான அயலான், கேப்டன் மில்லர், படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக தெலுங்கில் ஹனுமான் படம் மட்டுமே வெளியானது.
இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க, தமன் இசையமைத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேமிலி ஆக்சன் கதைக்களமாக உருவாகியுள்ள ‘குண்டூர் காரம்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்த படம் உலக அளவில் முதல் நாளில் 94 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘குண்டூர் காரம்’ படம் ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தியை ஒட்டி ரிலீஸ் ஆனது. இந்த நிலையில், தற்போது ‘குண்டூர் காரம்’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குண்டூர் காரம்’ படம் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘அண்ணே ரெடி போஸ்டர் அடி’…! வைரலாகும் மதுரை ரசிகர்களின் போஸ்டர்..!