ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
85

Rebel Movie Update: இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படம் ‘ரெபெல்’. இந்த படத்தில் மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். மேலும், படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், ‘ரெபெல்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தப் படம் வருகிற மார்ச் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தலில் தனித்து போட்டியிடும் விஜய்?.. ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here