ஹெச்.வினோத் – கமல் கூட்டணி கைவிடப்பட்டதா?.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு என்ன?

0
112

நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கமலின் 234ஆவது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். ‘தக் லைப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இதற்கிடையே கமல்ஹாசனின் 233ஆவது படத்தை, ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் கடந்த வருடம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம், அவர்கள் தயாரிக்கும் படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ‘கமல்-233’ படத்தின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இதன் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க: ‘இன்னும் என்னை ஆபாச பட நடிகையாகவே பார்க்கிறார்கள்’ – சன்னி லியோன் வருத்தம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here