பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா இயக்கும் ‘காந்தி’ வெப் சீரிஸ்..!

0
137

இந்திய தேச தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாகவும், வெப் சிரீஸாகவும் எடுக்கப்பட்டு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை வெப் சீரிஸாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஹன்சால் மேத்தா இந்த வெப் சீரிஸை இயக்கவுள்ளார். இந்த சீரிஸுக்கு ‘காந்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸை வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகங்களின் அடிப்படையில் இந்த வெப் சீரிஸ் தயாராகிறது. இந்த சீரிஸில் காந்தியாக பிரதிக் காந்தி நடிப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஹன்சால் மேத்தா மற்றும் பிரதிக் காந்தி ஆகியோர் இணைந்து ‘ஸ்கேம் 1992’, ‘பாய்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.

தற்போது காந்தி படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் சீரிஸை காந்தி தொடர்புடைய வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகள் நடைபெற திட்டமிட்டுள்ளனர். இந்த, ‘காந்தி’ வெப் சீரிஸுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், ஹன்சால் மேத்தா ‘காந்தி’ வெப் சீரிஸை தொடர்ந்து ‘தி பக்கிங்காம் மர்டர்ஸ்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘மோடி ஐயா உங்களுக்கு எனது சல்யூட்’ – ராமர் கோவில் திறப்பிற்கு வாழ்த்து கூறிய நடிகர் விஷால்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here