மிரளவைக்கும் ‘கார்டியன்’..! படம் எப்படி இருக்கு?..

0
132

Guardian Review: இயக்குநர் சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா பேயாக நடித்துள்ள படம் ‘கார்டியன்’. இந்த படத்தில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், தங்கதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த ‘கார்டியன்’ படம் மார்ச் 8ஆம் தேதி ரிலீஸானது. திரில்லர் கதைக்களத்துடன் பதறவைக்கும் காட்சிகளுடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

‘கார்டியன்’ கதை என்ன?

தமிழ் சினிமாவில் இதுவரை பாத்திராத ஒரு திரில்லரான ஹாரர் படம் என இந்த படத்தை சொல்லிடமுடியாது. வழக்கமான தமிழ் சினிமா பேய் படங்கள்போல பழி வாங்கும் கதையாக இந்த ‘கார்டியன்’ படம் அமைந்திருக்கிறது.

ஆனால், அதே பழி வாங்கும் கதையாக இருந்தாலும்கூட கதைக்களம், கதாபாத்திரங்கள் என மாறுபட்ட ஒரு வித்தியாசமான முறையில் நம்மை பதறவைக்கும் அளவிற்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதாநாயகியான ஹன்சிகாவை ராசி இல்லாதவர் போல் காட்டப்பட்டுள்ளது. அவர் எது செய்தாலும் அவருக்கு தோல்வியாகவே அமையும். அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கிறார்.

உடம்பை பேய்க்கு வாடகைக்கு கொடுத்த ஹன்சிகா:

இவர், இன்டீரியர் டிசைனிங் பணிக்காக சென்னை வருகிறார். அங்கு நடைபெறும் நேர்காணலில் அவர் சரியாக பதில் கூறவில்லை என்றாலும் அவருக்கு அந்த வேலை கிடைக்கிறது. தொடர்ந்து, அவர் நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது.

நமக்கா இதெல்லாம் நடக்குது என அவரே ஆச்சரியப்பட்டு இருக்கும்போது தான் அவருக்கு ஒரு விஷயம் தெரியவருகிறது. ஹன்சிகா உடம்பிற்குள் ஒரு பெண் ஆவி இருக்கிறது. இந்த ஆவி தான் இதெற்கெல்லாம் காரணம் என்பது உணர்கிறாள்.

அந்த ஆவி சிலரைப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஹன்சிகா உடம்பில் புகுந்துள்ளது. மேலும், அந்த ஆவி இந்த பழி வாங்க நீ தான் உதவி செய்ய வேண்டும் என ஹன்சிகாவிடம் கேட்கிறது.

அதிர்ஷடமே இல்லாத நமக்கு இந்த ஆவி மூலம் தான் நாம் நினைப்பதெல்லாம் நடக்கிறது என்பதை உணர்ந்த ஹன்சிகா, அந்த ஆவியை தனது உடம்பில் இருக்க ஒப்புக்கொள்கிறாள்.

யாரோ தெருஞ்சவங்க வீட்டிற்கு வந்து இரண்டு நாள் வீட்டில் தங்கிவிட்டு போங்க என சொல்வதுபோல ஹன்சிகாவும் அந்த ஆவியை தனது உடம்பில் தங்க ஒப்புக்கொள்கிறாள். இதற்கெல்லாம் முன்னதாக அந்த ஆவியின் பிளாஷ்பேக் நடக்குறது.

மிரளவைக்கும் ஹன்சிகா நடிப்பு:

ஆவியின் நிறைவேறாத ஆசை ஒன்றையும் நிறைவேற்றுவிடுகிறார். பர்ஸ்ட் ஆப் முழுவதும் அழகான கியூட் ஹன்சிகாவை பார்க்கலாம். செகண்ட் ஆப் முழுவதும் பழிவாங்கும் ஆக்ரோஷமான ஆவி ஹன்சிகாவை பார்க்கலாம்.

இந்த படத்தில் ஹன்சிகாவிற்கு காதலனும் இருக்கிறார், அந்த கதாபாத்திரத்தில் பிரதீப் ராயன் நடித்திருக்கிறார். அப்போ அப்போ மட்டும் இந்த கதாபாத்திரம் வந்து செல்கிறது.

அதேபோல படத்தில் நடித்த சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துள்ளனர். இதற்கிடையே வரும் மொட்டை ராஜேந்திரன்.

மொட்டை ராஜேந்திரனும், விஜய் டிவி தங்கதுரையும் அடிக்கிற லூட்டி எல்லா இடத்திலும் சிரிப்பலையை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் நல்லாவே சிரிக்க வைத்துள்ளனர்.

கடைசியாக அந்த ஆவி தான் நினைத்ததை நடத்தியதா?.. அனைவரையும் பழி வாங்கியதா? அந்த ஆவி ஹன்சிகா உடம்பில் இருந்து எப்படி விலகியது என்பது தான் படத்தின் மீதி கதை.

ஒரு ஆவியை வைத்து பழி வாங்கும் கதையை இயக்குநர் பல டிவிஸ்ட்டுகள், எதிர்பாராத காட்சிகளை வைத்து மிரட்டியிருக்கிறார். ஆவியாக வரும் ஹன்சிகாவை காட்டும்போதெல்லாம் வருகிற பிஜிஎம் பலம் சேர்த்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். சில இடங்களில் ஆவி ஹன்சிகா வரும் இடங்கள் மிரட்டலாகவும். பதறவைப்பது போலவும் அமைந்திருக்கிறது. தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்களும் தங்களது வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here